×

தூத்துக்குடியில் நேற்று கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது..!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸின் உடல் பிரேத பரிசோதளை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ் (56). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு டூவீலரில் மணலை கடத்தியதை பார்த்த விஏஓ லூர்து பிரான்சிஸ், முறப்பநாடு போலீசில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

அப்போது உள்ளே வந்த இருவர், அரிவாளால் லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டினர். அவர்களில் ஒருவர் என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பாய் எனக் கேட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து முறப்பநாடு போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விஏஓவை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி விஏஓ லூர்து பிரான்சிஸ் இறந்தார். இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மற்றொரு நபரான மாரிமுத்துவை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிசின் உடல் பிரேத பரிசோதளை தொடங்கியது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

The post தூத்துக்குடியில் நேற்று கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது..! appeared first on Dinakaran.

Tags : VAO ,Lourdes Francis ,Tuticorin ,Lourdes ,Francis' ,Thoothukudi district ,Vallanadu ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED பட்டா வழங்க லஞ்சம் ஈச்சந்தா விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன்